கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு அவர் நாட்டின் ஆளும் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்பார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்சிக்குள் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு, 59 வயதான மார்க் கார்னி, லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கனடா மற்றும் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றுள்ள மார்க் கார்னி, அந்த இரண்டு நாடுகளிலும் மத்திய வங்கி ஆளுநர்களாகவும் பணியாற்றியுள்ளார்.