follow the truth

follow the truth

March, 12, 2025
Homeவிளையாட்டு2025 சாம்பியன்ஸ் டிராபியை 3வது முறையாக வென்றது இந்தியா

2025 சாம்பியன்ஸ் டிராபியை 3வது முறையாக வென்றது இந்தியா

Published on

ICC சாம்பியன்ஸ் டிராபி கிண்ணத்தை 3வது முறையாக வென்றது இந்திய அணி.

துபாயில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 251 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் டேரல் மிட்செல் 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தநிலையில் 252 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு

2025ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL)...

சாம்பியன்ஸ் டிராபி நிறைவு விழா மேடையில் பாகிஸ்தான் புறக்கணிப்பு

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா...

கெப்டன் பும்ரா இல்லை – ஒருநாள் இந்திய அணியை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று...