follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP2திருமணம் செய்து கொள்ளாவிட்டால் பணிநீக்கம் - சீன நிறுவனத்தின் அறிவுறுத்தல்

திருமணம் செய்து கொள்ளாவிட்டால் பணிநீக்கம் – சீன நிறுவனத்தின் அறிவுறுத்தல்

Published on

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள நிறுவனமொன்று தனது ஊழியர்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேலையைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ,1200 ஊழியர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விவாகரத்து பெற்றவர்கள் உட்பட 28 – 58 வயதுடைய ஊழியர்கள் மார்ச் மாதத்துக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் தங்களைப் பற்றி சுய விமர்சனக் கடிதம் ஒன்றையும் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதற்கு ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து கடும் ஆட்சேபனை எழுந்ததை தொடர்ந்து உள்நாட்டு மனிதவள மற்றும் சமூகப் பாதுகாப்பு பணியகத்தின் தலையீட்டின் பின் அந்நிறுவனம் இவ் அறிவிப்பை நிராகரித்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபர் விளக்கமறியலில்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக...

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பதில் பணிப்பாளர் நியமனம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எச்.எம்.யு.ஐ கருணாரத்ன உடனடியாக அமுலுக்கு வரும்...