follow the truth

follow the truth

November, 22, 2024
HomeTOP1கொவிட் நெருக்கடியிலும் அரசியல் செய்யும் அரசாங்கம் - ரோஹிணி கவிரத்ன

கொவிட் நெருக்கடியிலும் அரசியல் செய்யும் அரசாங்கம் – ரோஹிணி கவிரத்ன

Published on

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, அவர்களின் போராட்டத்தை முடக்குவதற்காகவே திங்கட்கிழமை முதல் சகல அரச உத்தியோகத்தர்களும் சேவைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.

டெல்டா தொற்று பரவல் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் திங்கட்கிழமை முதல் சகல அரச உத்தியோகத்தர்களும் சேவைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். நாட்டில் காணப்படுகின்ற சகல சிக்கலான நிலைமைகளையும் அரசாங்கம் அதன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மாத்திரமே பயன்படுத்திக் கொள்கிறது. கொவிட் முதலாம் அலையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கும் , இரண்டாம் அலையை 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் , மூன்றாம் அலையை துறைமுக நகர சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொண்ட அசராங்கம் தற்போதைய நிலைவரத்தை அதிபர் ஆசிரியர்களின் போராட்டத்தை முடக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை விடுமுறைகள் இன்று தொடங்கி, ஜனவரி 02 மீண்டும் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான...

கரையோர ரயில் சேவையில் தாமதம்

காலியில் இருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்றில் இன்று (22) காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பூஸ்ஸ ரயில்...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் சிக்கன வாகனம்

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு...