follow the truth

follow the truth

March, 10, 2025
Homeலைஃப்ஸ்டைல்குழந்தைகள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் இதோ..

குழந்தைகள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் இதோ..

Published on

இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.

நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

பருப்பு உணவுகள்
இரண்டு வயது குழந்தைக்கு பருப்பு சம்பந்தப்பட்ட உணவை தினமும் உண்ணக்கொடுக்கும்போது, உடலில் புரதத்தின் அளவு சரியாக தக்க வைக்கப்படும். பருப்பு வகைகளில் பல வகைகள் இருக்கிறது. இருப்பினும் பாசிப் பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.

ஆரோக்கியமான எண்ணெய்கள்
ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், சோயா பீன்ஸ், பிற நட்ஸ் வகைகள் மற்றும் அவற்றின் எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றை இரண்டு வயது குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாம்.

பால் பொருட்கள்
பால் பொருட்களான பால், தயிர், பன்னீர் அனைத்தும் கால்சியம் நிறைந்தவை. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. உங்கள் குழந்தைக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால், கால்சியம் பற்றாக்குறையை ஈடுசெய்ய கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாழைப்பழங்கள்
மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இதய ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. தசை வலிமைக்கு தேவையான சத்துக்கள் வாழைப்பழங்களில் காணப்படுகின்றன. இந்த நன்மை பயக்கும் பழத்தை தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் இணைத்து சாப்பிடலாம்.

கரட்
கரட் ‘வைட்டமின்-ஏ’ நிறைந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கீரை மற்றும் பிற காய்கறிகளிலும் வைட்டமின்-ஏ அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.

கோழி
கோழி மற்றும் பிற அசைவ உணவுகளில் எளிதில் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்து உள்ளது. இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு சக்தி அளிக்க உதவுகிறது. ரத்த சோகையைத் தடுக்கிறது.

சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவை வைட்டமின்-சி உள்ளடக்கத்திற்கு புகழ் பெற்றவை. வைட்டமின்-சி குறைபாடு ஸ்கர்வி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். ஈறுகள் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் வைட்டமின்-சி உதவுகிறது. மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றிலும் வைட்டமின்-சி உள்ளது.

மீன்
அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டவைகளுள் மீன் ஒரு நல்ல மூலமாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. இதய அமைப்பை பலப்படுத்துகின்றன.

விட்டமின்-டி
இது ஒரு உணவு அல்ல என்றாலும், உடல் உறிஞ்சும் சத்தாகும். உடல் வளர்ச்சியில் விட்டமின்-டி முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின்-டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IIFA 25வது விருது வழங்கும் விழா

இந்தியாவின் குஜராத்தில் நடைபெற்ற 25வது IIFA விருதுகளில் கிரண் ராவின் Laapataa Ladies திரைப்படம் அதிக விருதுகளை வென்றுள்ளது. அதன்படி,...

கணினியில் வேலையா? கண்கள் பத்திரம்

தற்போது பெரும்பாலும் கணினி வைத்தே அலுவல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பம் பெருகி, மடிக்கணினி இன்றி பணி செய்வது அரிதாகி...

இயர்போன் அல்லது ஹெட்போன் – நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படலாம்

இயர்போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் உங்களால் ஒருநாளைக் கூட கடக்க முடியாதா? ‘அப்படியென்றால் உங்களுக்கு நிரந்தர காது கேளாமை...