மின்சாரக் கட்டண உயர்வைத் தவிர்க்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முனீர் முளஃபர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கச் செய்த பரிந்துரை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
திவாலான நாடு மீண்டும் பொருளாதார வலிமையைப் பெற்று வரும் நேரத்தில், அனைத்துத் துறைகளிலும் பிரச்சினைகள் இருப்பதை உணர்ந்து, அவற்றைத் தீர்த்து முன்னேறிச் செல்ல நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.