தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கை நிச்சயமாக ஒரு சொர்க்க நாடாக மாறும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளை அதிகாலையில் எடுத்த கேக் துண்டு போல மக்கள் நிராகரித்துவிட்டதாகவும் கூறினார்.
“வாரத்திற்கு ஒரு முறை எதிர்க்கட்சி குரங்குப் பிரச்சினையை கொண்டு வருகிறது, யானைப் பிரச்சினையை கொண்டு வருகிறது, அவை குறைந்தது ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்காது.. எதிர்கட்சியினர் செய்வதறியாது முணுமுணுக்கின்றனர். இவை எம்மிடம் செல்லாது மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் அதனாலேயே NPP அரசுக்கு மக்கள் ஆணை கிடைத்தது. இந்த நாட்டை ஒரு சொர்க்க இராஜ்யமாக மாற்றும் வரை நாங்கள் ஓயமாட்டோம்..”