பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மார்ச் 16-ம் திகதி நடைபெறுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் தலைவர் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி தலைவராக சல்மான் அலி ஆகாவும், துணை தலைவராக ஷதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த நிலையில் முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடருக்கான அணியில் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.