தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பழிவாங்கல் நடக்காது என்று கூறிய போதிலும், அத்தகைய பழிவாங்கல் நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இருவரும் இத்தகைய பழிவாங்கல்களை எதிர்கொண்டுள்ளதாக இன்று (04) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.