சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு தொடர்பாகத் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதெனத் தீர்ப்பளிக்கக் கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இன்றைய தினம் நீதியரசர்களான காமினி அமரசேகர, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருணா ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.