சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழியென இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (04) காலை பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, அனைத்து கடினமான மாற்றங்களும் கடந்த இரு ஆண்டுகளில் நடந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது எதிர்காலத்தை மிகவும் எளிதாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.