follow the truth

follow the truth

March, 4, 2025
Homeஉள்நாடுரயில்களில் யானைகள் மோதி விபத்து தொடர்பில் உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

ரயில்களில் யானைகள் மோதி விபத்து தொடர்பில் உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

Published on

ரயில்களில் யானைகள் மோதி இடம்பெறும் விபத்துக்களை குறைக்க ஒரு முறையான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரியும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம், ரயில்வே பொது முகாமையாளர், போக்குவரத்து அமைச்சர், வனவிலங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

விபத்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விபத்துகளைத் தடுக்க ரயில் சாரதிகளுக்கு வேக வரம்புகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், யானை விபத்துக்களைக் குறைக்க சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சர், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொடர்ச்சியான விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் மேலும் கோரியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் – IMF

சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழியென இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பீட்டர்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. அதன் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்;

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று CID இற்கு

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப்...