இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் இருந்து நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த 196 கார்கள் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வேகன் ஆர், ஆல்டோ, டொயோட்டா யாரிஸ் மற்றும் வெசல் உள்ளிட்ட பல வகையான வாகனங்கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் கூறுகையில், வேகன் ஆர் கார் 65 முதல் 75 இலட்சம் வரையிலும், ஆர்எஸ் கார் 80 இலட்சம் முதல் 100 இலட்சம் வரையிலும், வெசல் வகை கார் 165 முதல் 200 இலட்சம் வரையிலும் விற்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.