பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 20.03.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் செல்லுபடியாகும் காலம் 28.02.2025 அன்று காலாவதியாகும் என்று முன்னர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.