புளூமெண்டல் ரயில் கடவை வீதியானது பழுதுபார்ப்பு பணிகளுக்காக நாளை (01) முழுமையாக மூடப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஒருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை செல்லும் ரயில் பாதையில் உள்ள ப்ளூமெண்டல் ரயில் கடவையில் அவசர பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதன்படி, நாளை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.