தாய்லாந்து – மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் இணைய மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்று கூறி இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இணைய மோசடி செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் தாய்லாந்து – மியான்மர் எல்லையில் இணைய மோசடியில் ஈடுபட்ட 7,000 பேர் சிக்கியுள்ளனர்.
இணைய மோசடியில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக தாய்லாந்து நடவடிக்கை எடுக்கும் என்று தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.