follow the truth

follow the truth

April, 21, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅரசாங்கம் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது - மக்களின் சுமையை குறைப்பதே எங்கள் அரசின் நோக்கம்

அரசாங்கம் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது – மக்களின் சுமையை குறைப்பதே எங்கள் அரசின் நோக்கம்

Published on

சிறப்புரிமையை தனிப்பட்ட உரிமையாக எடுத்துக்கொண்டு, கடந்த காலங்களில் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களை தவறாக பயன்படுத்தியுள்ளனர். அரசாங்கம் மக்களுக்கு மேலும் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக அரசு தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் விசேட பிரிவுகளின் வரவு செலவுத் தலைப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் நேற்று(27) பாராளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் கூறியதாவது:

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தற்போதைய அரசாங்க வேலைத்திட்டம் பற்றிய புரிதல் இல்லை என்பது அவர்களின் பேச்சுக்களில் இருந்து தெரிகிறது. அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சில வேலைத்திட்டங்களுக்கு இறுதி முடிவுகள் எட்டப்பட்டதைப் போன்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றன. எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் புதிய அரசியல் கலாசாரத்திற்கான ஆரம்பமாகும்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் பேசின. மக்களின் பங்களிப்புடனேயே அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்வோம் என எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறியுள்ளோம். அந்த அரசியலமைப்பு மக்கள் அரசியலமைப்பாக இருக்க வேண்டும்.

வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் விசேட செலவின அலகுகள் மூலம் எமது புதிய அரசியல் கலாசாரத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை விளக்கியுள்ளோம். எதிர்க்கட்சிகள் அந்த தொலைநோக்கை புரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு விடயத்தையும் விமர்சிக்கின்றன.

அரசாங்கம் என்ற வகையில் நாம் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது. மக்கள் மீது சுமையை ஏற்றும் வகையிலேயே கடந்த அரசுகள் செயல்பட்டன. அரச சேவை மட்டுமின்றி அரசும் மக்களுக்கு சுமையாக மாறியிருந்தது. இந்த நாட்டின் அமைச்சர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் மக்களுக்கு சுமையாக மாறியிருந்தனர். மக்களின் சுமையை குறைப்பதே எங்கள் அரசின் நோக்கம். அதனால்தான் அந்த அலகுகளின் செலவுகளில் நாங்கள் விசேட கவனம் செலுத்துகிறோம்.

ஒரு அரசாங்கம் மக்களிடமிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பெறும் வரிகளாலேயே பராமரிக்கப்படுகிறது, மேலும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நாங்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.

பதவிகள் மற்றும் சிறப்புரிமைகளை தனிப்பட்ட ரீதியில் பெற்ற ஒன்றாக கருதுவது மோசடிக்கும் ஊழலுக்கும் காரணம் என்பதை அரசாங்கம் என்ற வகையில் நாம் புரிந்து கொண்டுள்ளோம். பதவியின் காரணமாக, சிறப்புரிமை காரணமாக கிடைக்கும் அதிகாரத்தை வைத்து தாம் தனித்துவமானவர்கள் என்று எண்ணும் அகங்காரம் மிகவும் ஆபத்தானது. சிறப்புரிமை பதவிக்கானதேயன்றி தனிநபருக்குரியது அல்ல என்பதை அரசியல்வாதிகள் மட்டுமின்றி அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து...

இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் – ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று...