2025 ஜனவரி மாதம் மனித – யானை மோதலால் சுமார் 43 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபாண்டி தெரிவித்துள்ளார்.
இந்த மோதலால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதோடு, மனித-யானை மோதல்களினால் சுமார் 1,195 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.