அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிலையில், இரண்டாவது தொகுதி பயன்படுத்தப்பட்ட கார்கள் இன்று இரவு ஜப்பானில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து சேரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முதல் தொகுதி நேற்று முன்தினம் தாய்லாந்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
மார்ச் மாத இறுதிக்குள் 4,000 வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டங்கள் உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்தார்.