follow the truth

follow the truth

February, 27, 2025
HomeTOP2இரத்த வாந்தி எடுத்து 53 பேர் மரணம்.. காங்கோவில் பரவும் மர்ம நோய்

இரத்த வாந்தி எடுத்து 53 பேர் மரணம்.. காங்கோவில் பரவும் மர்ம நோய்

Published on

ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக சில நாட்களில் 53 பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அங்கே காட்டுத்தீ போல இந்த மர்ம நோய் பரவி வருகிறது. இந்த நோயால் 431 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பெப்ரவரி 10 – 16-க்கான செய்தி அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு இந்த நோய் குறித்து எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது.

பாதிக்கும் மேற்பட்டோர் அறிகுறி தென்பட்ட 48 மணி நேரத்தில் மரணம் அடைந்துவிட்டதாக உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. வவ்வால் கறி மூலம் இந்த நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆம் சீனாவில் கொரோனா பரவ இதே காரணம் சொல்லப்பட்டது. இப்போது காங்கோவிலும் இதே காரணம் சொல்லப்படுகிறது.

அங்கே வவ்வால் கறி சாப்பிட்ட 3 சிறுவர்களிடம் முதலில் இந்த நோய் கண்டறியப்பட்டதால், அவர்களிடமிருந்தே பிறருக்கு பரவியதாக சந்தேகம் எழும்பி உள்ளது. .

ஒருவருக்கு இந்த நோய் ஏற்பட்டால்.. அடுத்த 48 மணி நேரத்தில் அவர்கள் மரணம் அடைந்து விடுகின்றனர்.

WHO ஆப்பிரிக்க பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, மூன்று சிறுவர் வவ்வால் கறி சாப்பிட்டு 48 மணி நேரத்திற்குள் இரத்தக்கசிவு காய்ச்சல் ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நெருக்கமாக இருந்தவர்கள், அவர்களின் காண்டாக்ட் ஆகியோருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. போலோகா என்ற பகுதியில் இந்த நோய் பரவி உள்ளது.

அதன்பின் அருகில் உள்ள போர்னேட் பகுதியில் 13 பேருக்கு நோய் ஏற்பட்டது. இப்போது 400 பேருக்கும் அதிகானோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பொதுவாக கிளைமேட் மாறுவதால் ஏற்படும் சீசன் காய்ச்சல் ஏற்படும். அது போல இந்த காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. சிலருக்கு மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு, சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் சுவை இழப்பு, வாசனை இழப்பு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். ஆனால் இது கிளைமேட் காய்ச்சல் போல இல்லை.

அறிகுறி சிறிதாக இருந்தாலும் அதன்பின் இரத்த வாந்தி எடுக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. இது தொடர்பாக சோதனை செய்யப்பட்டவர்களின் அனைத்து மாதிரிகளும் இது எபோலா, கொரோனா, பிற பொதுவான இரத்தக்கசிவு காய்ச்சல் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

மலேரியாவும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் அறிகுறி சிறிதாக இருந்தாலும் அதன்பின் இரத்த வாந்தி எடுக்கும் பிரச்சினை உள்ளதால் நோய் மர்மமானதாக உள்ளது.

இதனால் மக்கள் பலருக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து உள்ளது.

சிலருக்கு இந்த காய்ச்சல் போனதும் மீண்டும் 1 வாரத்தில் வருகிறது. சிலருக்கு 1 வாரம் கூட இந்த காய்ச்சல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு பலரும் செல்கிறார்கள். அதாவது அவ்வளவு எளிதாக இந்த காய்ச்சல் குணமாவது இல்லை.

பலரும் இது கொரோனாவாக இருக்குமோ என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது கொரோனாவாக இருக்க வாய்ப்பு குறைவு. அதை போன்ற அறிகுறிகள் கொண்ட காலநிலை காய்ச்சல்கள் ஆக இருக்கலாம். ஆனால் இரத்த வாந்தி எடுப்பதுதான் உலக சுகாதார மையத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோட்டாவுக்கு பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வழங்குங்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன...

இன்று டட்லி மௌனம் சாதிக்க, விவசாயி கூச்சல் போடும் நிலை

பொருளாதார ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்தா கூறினாலும், இறுதியாக அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து ஜனாதிபதி மேசையை...

கனேமுல்ல சஞ்சீவ கொலை – செவ்வந்தியின் தாய், சகோதரனுக்கு விளக்கமறியல்

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரனை எதிர்வரும்...