உலகில் முதல் முறை அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி $149,729 டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1992ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட இந்த முதல் குறுஞ்செய்தியில் ‘Merry Christmas’ என்ற குறுந்தகவலே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி தொலைத்தொடர்பு நிறுவனமான வொடாபோனின் ஊழியர் ரிச்சர்ட் டேவிஸுக்கு அந்த செய்தி அனுப்பப்பட்டது.
இதன்படி, குறித்த குறுந்தகவல் 149,729 அமெரிக்க டொலருக்கு (32 மில்லியன் இலங்கை ரூபா) விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.