சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ள நிலையில் ராவல்பிண்டியில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
மைதானத்திலிருந்து நீரை வெளியேற்ற வசதி இல்லாமை காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 அல்லது 25 ஓவர்கள் போட்டியாவது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டுள்ளது.