கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேக நபர், இன்று (25) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.