follow the truth

follow the truth

February, 26, 2025
Homeஉள்நாடுமாலைதீவு - இலங்கை இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் அவதானம்

மாலைதீவு – இலங்கை இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் அவதானம்

Published on

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்(Masood Imad) அவர்களுக்கும் இடையில் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.

கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அடைந்த வெற்றிகளுக்கு மாலைதீவு குடியரசின் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர் ஸ்தானிகர், தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையேயான 60 ஆண்டுகால நட்பை வலுப்படுத்தி, தொடர்ந்து பேணுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் மாலைதீவு ஆற்றும் சிறப்பான பங்களிப்பிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய தேர்தல் சட்டங்கள்

தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றப்படாவிட்டால், வாக்காளருக்கு அவற்றைக் கேள்வி கேட்க உரிமை உண்டு என்று...

நாமல் வாக்குமூலம் அளித்து விட்டு CID இலிருந்து வெளியேறினார்

சர்ச்சைக்குரிய Airbus ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர்...

வறட்சியான காலநிலையால் நீர் விநியோகம் தடை

தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை...