follow the truth

follow the truth

February, 26, 2025
HomeTOP2சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா : பாகிஸ்தான், பங்களாதேஷ் வெளியேற்றம்

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா : பாகிஸ்தான், பங்களாதேஷ் வெளியேற்றம்

Published on

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏ பிரிவில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறும்.

முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பங்களாதேஷிற்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 3 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. பாகிஸ்தான் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்திருந்தது.

இன்று நடைபெற்ற 4-வது போட்டியில் பங்களாதேஷத்தை நியூசிலாந்து வீழ்த்தியிருந்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் இந்தியாவும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் தனது கடைசி மற்றும் ஏ பிரிவின் 5-வது பங்களாதேஷத்தை எதிர்கொள்ளும். இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வெற்றி பெறும் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்ற திருப்தியோடு தொடரில் இருந்து வெளியேறும்.

இந்தியா தனது கடைசி மற்றும் ஏ பிரிவின் 6-வது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரத்த வாந்தி எடுத்து 53 பேர் மரணம்.. காங்கோவில் பரவும் மர்ம நோய்

ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக சில நாட்களில் 53 பேர் மரணம் அடைந்த சம்பவம்...

மீண்டும் பந்து வீச மேத்யூ குஹ்னெமனுக்கு ICC அனுமதி

சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு பாணி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமனுக்கு (Matthew Kuhnemann),சர்வதேச கிரிக்கெட்டில்...

கோட்டாவுக்கு பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வழங்குங்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன...