நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி இதனைக் கூறியுள்ளார்.
மின்சார சபையின் செலவினங்களைக் கையாண்டு தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதாக இருந்தால் கட்டாயமாகக் கட்டண சீரமைப்பு ஒன்றுக்குச் செல்ல வேண்டியேற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.