பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
நாளைய தினமும் நாட்டின் பல இடங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் என்று அதன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமேல், மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.