பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் பெண்ணின் புதிய படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் நீர்கொழும்பு கட்டுவெல்லகம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரி, காவல்துறை இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
தேடப்படும் சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591727 / 071 – 8591735 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.