ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளைக் விடவும் முன்னிலையில் இருந்தாலும், அக்கட்சியால் எதிர்பார்த்தபடி 30 சதவீத வாக்குகளை பெற இயலவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தலில் பலன் பெற்ற மற்றொரு கட்சி தீவிர வலதுசாரி கட்சியான ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி (AfD) கட்சியாகும். 20.8 சதவீத வாக்குகளுடன் அந்த கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இக்கட்சிக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் பதவியேற்பார் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.