எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர நீர் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை முதல் தண்ணீர் விநியோகம் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தாங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, தேசிய நீர் வழங்கல் சபையின் பொது மேலாளர் டி. பாரதிதாசன் கூறுகையில், தற்போதைய வறண்ட வானிலை காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதை மீட்டெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொது மேலாளர் தெரிவித்தார்.
அதுவரை, பவுசர் மூலம் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்கப்படும் என்றார்.