நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் இன்று (24) வெப்பமான காலநிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பக் குறியீடு, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘எச்சரிக்கை’ வெப்பநிலையின் கீழ், நீண்ட நேரம் வெளிப்பகுதியில் தொடர்ந்து செயல்பாடுகளில் ஈடுபாடுவதால் வெப்பப் பிடிப்புகள் ஏற்படக்கூடும்.
எனவே, பொதுமக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், முடிந்தவரை அடிக்கடி வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.