தமது குடும்பத்தை விமர்சிப்பதையே சமகால அரசாங்கம் பணியாக செய்து வருவதாகவும், தான் கைது செய்யப்பட்டாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (23) களுத்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க போதி மரத்திற்கு அருகில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;
“முன்னர் நாளாந்த செய்திகளை பார்த்த போது, நாட்டில் வளர்ச்சித் திட்டங்கள், அடிக்கல் நாட்டுதல், பதவியேற்பு விழாக்கள் ஆகியவற்றைப் பார்த்தோம். இன்று, செய்திகளைப் பார்க்கும்போது, மக்கள் அச்சப்படுகிறார்கள்.
வளர்ச்சிக்குப் பதிலாக, துப்பாக்கிச் சூட்டைப் பார்க்கிறோம். அன்று, நாடு முழுவதும் வேலை செய்யும் இடமாக மாறியிருந்தது. இன்று, மக்கள் மரண பயத்தை உணர்கிறார்கள். கடந்த காலத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேட வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.
இந்த அரசாங்கம் செய்வதெல்லாம் முந்தைய அரசாங்கங்களை விமர்சிப்பதுதான். மேலும் நாளைய தினம் நான் கைது செய்யப்பட்டாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை..”
Inaugurated the final Maha Perahera of the historic Olaboduwa Navam Maha Perahera in Raigampura, under the “Gamin Gamat” Kalutara District Program. Received blessings from Chief Incumbent Dhammika Nayaka Thero #GaminGamat #Kalutara #OlaboduwaMahaPerahera pic.twitter.com/UsIlqJBXZN
— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 23, 2025