follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2அதெப்படி இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்? ஐ.சி.சி.-யை கிழித்தெடுத்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

அதெப்படி இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்? ஐ.சி.சி.-யை கிழித்தெடுத்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Published on

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராக பார்க்கப்படும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இந்தியாவின் தேசிய கீதம் சில நொடிகளுக்கு இசைக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டியின் போது இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்க செய்தது குறித்து ஐ.சி.சி. விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளது. மேலும், இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.சி.சி.க்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறும் போது, இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.-க்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“சாம்பியன்ஸ் டிராபியில் தேசிய கீதம் ஒலிக்க செய்வதற்கு அவர்கள் தான் பொறுப்பேற்றுள்ளனர் என்ற அடிப்படையில், ஐ.சி.சி. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிபட தெரிவித்துள்ளது. இந்தியா தனது போட்டிகளை பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பதால், அவர்களது தேசிய கீதம் எப்படி தவறாக இசைக்கப்பட்டு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள அவர்கள் கடினமாக உணர்கின்றனர்,” என ஐ.சி.சி. வட்டாரங்கள் கூறியுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட மறுத்துவிட்டது. இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி,...

அதிவேக 1000 ஓட்டங்கள்.. – சச்சினை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த படிதார்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ஓட்டங்களை மட்டுமே...