follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2இந்திய அணியுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் இல்லை - அப்ரிடி

இந்திய அணியுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் இல்லை – அப்ரிடி

Published on

ஒன்பதாவது வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அதனால் இந்தியா உடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிடி கருத்து தெரிவிக்கையில்; “பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்திய அணியிடம் அதிக மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். ஒரு மேட்ச்-வின்னர் என்பவர் ஆட்டத்தில் அணியை வெற்றி பெற வைப்பவர். தற்போது, பாகிஸ்தானில் அப்படிப்பட்ட வீரர்கள் இல்லை” என்று தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி,...

அதிவேக 1000 ஓட்டங்கள்.. – சச்சினை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த படிதார்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ஓட்டங்களை மட்டுமே...