follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP1பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்

Published on

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது.

88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் வத்திகான் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சனிக்கிழமை தொடக்கத்தில் “நீண்டகால ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறால் பாப்பரசரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளது.

மேலும் அவருக்கு இரத்தமாற்றம் செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி கத்தோலிக்கர்களை வத்திகான் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வத்திகான் நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

சீனாவில் 10G இணைய சேவை அறிமுகம்

பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உலகின் முதல் 10ஜி இணைய...

தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றிலிருந்து பிணைப்பெற்று செல்லும்...