follow the truth

follow the truth

April, 16, 2025
Homeலைஃப்ஸ்டைல்ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட தேங்காய் பூ மில்க் ஷேக்

ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட தேங்காய் பூ மில்க் ஷேக்

Published on

உடல் ஆரோக்கியத்திற்காக இளநீர் குடிப்பது போன்று தற்போது தேங்காய் பூ, தென்னங்குருத்து போன்றவை வாங்கி சாப்பிடும் பழக்கம் மக்களிடம் அதிகரித்து விட்டது.

பார்ப்பதற்கு ஜஸ்கிரீம் வைத்திருப்பது போன்று தோற்றமளிக்கும் தேங்காய் பூவில் உள்ள அற்புத நன்மைகள் தெரிந்த பலரும் தேடி தேடி விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய மில்க் ஷேக் செய்வதற்கு முதலில் கீழ்வரக்கூடிய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேவையான பொருட்கள்
தேங்காய் பூ – 2
பால் – அரை டம்ளர்
குளிர்ச்சியான தண்ணீர் – அரை டம்ளர்
சர்க்கரை – தேவையான அளவு
பேரிச்சம்பழம் – 4
மில்க் ஷேக் செய்முறை:
தேங்காய் பூவில் மில்க் ஷேக் செய்வதற்கு முதலில் பூவை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் பேரிச்சம்பழம் மற்றும் தேவையான அளவு சர்க்கரை, அரை டம்ளர் பால், மற்றும் தேன் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

இறுதியாக இதை ஒரு டம்ளரில் மாற்றி கொஞ்சமாக குளிர்ந்த நீரை சேர்த்தால் போதும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய தேங்காய் பூ மில்க் ஷேக் ரெடி.

வாரத்திற்கு ஒருமுறையாவது தேங்காய் பூவில் செய்யக்கூடிய மில்க் ஷேக் சாப்பிடும் போது பல்வேறு ஊட்டச்சத்துக்களை எளிதாக பெற முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாதவிடாய் பிரச்சனையா..? இனி கவலைய விடுங்க…

மாதவிடாய் பிரச்சனை என்பது இன்று பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது. சிலருக்கு மாதவிடாய் வராமல் தள்ளிப் போய்கொண்டே இருக்கும். வேறுசிலருக்கு மாதவிடாயின்...

குழந்தைகளை தாக்கும் ‘தக்காளி காய்ச்சல்’

கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் 'தக்காளி காய்ச்சல்' பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே...

பசி எடுக்கும்போது பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

அதிகாலையில் பசித்தால், அவசரத்துக்கு பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதுவே பழக்கமாகிவிடக் கூடாது. சிலபேர் காலையில் காபியுடன் ஒன்று...