இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடித்தமை சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலாகும் என இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு அமைய வன்முறை தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Isreal Katz) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஹமாஸின் வான்வழித்தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இஸ்ரேலிய பணயக் கைதிகள் நால்வரின் உடல்கள் நேற்று இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் இரண்டு சிறுவர்கள் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கொல்லப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் நால்வரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது மிகுந்த வேதனை அளிப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
אל נקמות ה׳ pic.twitter.com/V3ItZ1wnuf
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) February 20, 2025