மாத்தறை மாவட்டத்தின் அகுரெஸ்ஸவில் உள்ள ‘ஒலு தொல’வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, அக்குரெஸ்ஸ பிரதேச செயலகம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் விவசாய சேவைகள் திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
2025 இல் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள, பழைய நெல் வயல்களைப் பயிரிடுதல், நீர்ப்பாசன கால்வாய்களைப் புதுப்பித்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான பல விசேட திட்டங்களை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் பல செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
மாத்தறையின் அகுரெஸ்ஸ நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரம் பிடபெத்தர நோக்கி பயணிக்கும்போது உள்ள ஒலியகன் வனப்பகுதிக்குள் ‘ஒலு தொல’ அமைந்துள்ளது.