follow the truth

follow the truth

March, 28, 2025
HomeTOP2இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தென் கொரியா தொடர்ச்சியாக ஆதரவு

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தென் கொரியா தொடர்ச்சியாக ஆதரவு

Published on

கொரியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மியோன் லீ , சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை நேற்று(18) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சுற்றுலா ஆகிய பிரதான துறைகளில் இரு தரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது தொடர்பில் சபாநாயகரும், தென்கொரியத் தூதுவரும் கருத்துக்களைப் பரிமாறினர்.

இந்தத் துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதன் ஊடாக பரஸ்பர அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் தமது உறுதிப்பாட்டை இருதரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.

கொரிய குடியரசின் ஒத்துழைப்புடன் தற்பொழுது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து தென்கொரியத் தூதுவர் மியோன் லீ விளக்கமளித்தார்.

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தென் கொரியாவின் தொடர்ச்சியான ஆதரவு இருக்கும் என்பதை உறுதிப்படுத்திய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான நம்பிக்கையும் வெளிப்படுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனவரி முதல் இதுவரை 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 684,960...

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,...

பாங்கொக்கில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பாதகமான சம்பவங்கள் எதுவும் இதுவரையில்...