எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இன்று மதியம் தொடங்கியது.
கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான நாணயற் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்து அணி:-
1. வில் யங், 2. கான்வே, 3. கேன் வில்லியம்சன், 4. டேரில் மிட்செல், 5. டாம் லாதம், 6. பிலிப்ஸ், 7. பிரேஸ்வெல், 8. சான்ட்னெர், 9. மேட் ஹென்றி, 10. நாதன் ஸ்மித், 11. வில் ஓ, ரூர்கே.
பாகிஸ்தான் அணி:-
1. ஃபஹர் சமான், 2. பாபர் அசாம், 3. சாத் ஷாகீல், 4. முகமது ரிஸ்வான், 5. சல்மான் ஆகா, 6. தையப் தாஹிர், 7. குஷ்தில் ஷா, 8. ஷாஹீன் ஷா அப்ரிடி, 9. நசீம் ஷா, 10. ஹாரிஷ் ராஃப், 11. அப்ரார் அகமது.