கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் திகதி மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதால், மேலும் விலை அதிகரிப்பு இருக்காது என்று மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் யு.எல்.உதய குமார பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்து சட்டவிரோத மதுபான நடவடிக்கைகளை ஒடுக்கவும், அரசாங்கத்திற்கான வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.