முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகனை சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனம் தொடர்பில் இன்று (18) வாக்குமூலம் வழங்குவதற்காக வருகைதந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் நாளை (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.