கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை இலங்கை மின்சார சபை வௌியிட்டுள்ளது.
அதன்படி, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக சபை தெரிவித்துள்ளது.
மின் தடை குறித்த விசாரணையைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை மின்சார சபை இதனை குறிப்பிட்டுள்ளது.
எனவே மீண்டும் இவ்வாறான நிலை ஏற்படுவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதனை மழுப்பும் விதத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பதிலளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அது குறித்து எரிசக்தி அமைச்சர் பதிலளிப்பார் என்றும் கூறினார்.
இது குறித்து தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விகளில், குரங்கு கதையை உலகே நம்புவதாகவும் நாம் இது குறித்து உண்மைத்தன்மையை கேட்பதில் என்ன பிரச்சினை என வினவ, அதற்கு நளிந்த ஜயதிஸ்ஸ, இப்போது குரங்கு கதை முடிந்து விட்டது, மீண்டும் மீண்டும் குரங்கை ஞாபகப்படுத்த வேண்டாம். தற்போது தடையின்றினை மின்சாரம் வழங்கப்படுகிறது தானே என கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.