follow the truth

follow the truth

February, 22, 2025
Homeவிளையாட்டுஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியானது

ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியானது

Published on

கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன.

முதல் போட்டியில் நடப்பு ஐபிஎல் தொடரின் கடந்த முறை செம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும பெங்களூரு அணி உடன் மோத உள்ளது.

இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதே போன்று முதல் ப்ளே ஆஃப் சுற்று ஐதராபாத் மைதானத்திலும் இறுதி போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது.

சி.எஸ்.கே அணியின் முதல் போட்டி மார்ச் 23ஆம் திகதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மும்பை அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே போன்று ஆர்சிபி அணி உடனும், மும்பை அணியுடனும் சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் விளையாட உள்ளது.

தகுதிகாண் சுற்று 1 போட்டி மே 20 ஆம் திகதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் திகதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

தகுதிகாண் சுற்று 2 போட்டி மே 23 ஆம் திகதியும் ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25ஆம் திகதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 2025 ஐபிஎல் கோப்பை ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் முன்பு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

ஐபிஎல் கோப்பைக்கு கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மும்பை அணிகள் மோதும் முதல் போட்டிக்கான சிறப்பு போஸ்டரை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. அதில், இப்போட்டி எல் கிளாசிகோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இரு அணிகளும் வென்ற கோப்பைகள் அந்த பதிவில் இடம்பெற்றுள்ளது.

சிஎஸ்கே அணி – போட்டி அட்டவணை

சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ், மார்ச் 23

சிஎஸ்கே – ஆர்சிபி, மார்ச் 28

ராஜஸ்தான் ரோயல்ஸ் – சிஎஸ்கே, மார்ச் 30

சிஎஸ்கே – டெல்லி கேப்பிட்டல்ஸ், ஏப்ரல் 5

பஞ்சாப் கிங்ஸ் – சிஎஸ்கே, ஏப்ரல் 8

சிஸ்கே – கொல்கத்தா, ஏப்ரல் 11

லக்னோ சூப்பர் கெயின்ட் – சிஎஸ்கே, ஏப்ரல் 14

சிஎஸ்கே – சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஏப்ரல் 25

சிஎஸ்கே – பஞ்சாப் கிங்ஸ், ஏப்ரல் 30

ஆர்சிபி – சிஎஸ்கே, மே 3

கேகேஆர் – சிஎஸ்கே, மே 7

சிஎஸ்கே – ராஜஸ்தான் ரோயல்ஸ், மே 12

குஜராத் டைட்டன்ஸ் – சிஎஸ்கே, மே 18

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் தசுன் ஷானகவுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிப்பு

மூர்ஸ் மற்றும் எஸ்எஸ்சி விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான இன்டர்-கிளப் மூன்று நாள் கிரிக்கெட் போட்டியின் போது, ​​சர்வதேச லீக்...

இலங்கை – இந்திய அணிக்கும் இடையில் முதல் போட்டி – எதிர்வரும் 22 ஆரம்பம்

Masters என விபரிக்கப்படும் சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் 6 அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்...

மஹீஷ் தீக்ஷன ஒருநாள் தரவரிசையில் முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன...