நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் செயலிழந்ததன் காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடை அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று(22) மாலை 6 மணி முதல் இரவு 9. 30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 30 முதல் 45 நிமிடங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும் என அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எந்தெந்த பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்பது குறித்து சரியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.