follow the truth

follow the truth

February, 19, 2025
Homeலைஃப்ஸ்டைல்டார்க் சாக்லேட் Vs மில்க் சாக்லேட் - ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

டார்க் சாக்லேட் Vs மில்க் சாக்லேட் – ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

Published on

குழந்தைகளையும் சாக்லேட்டுகளையும் என்றுமே பிரிக்க முடியாது. அழுகையில் ஈடுபடும் குழந்தைகளை அம்மா சமானதாப் படுத்துகிறாரோ? இல்லையோ? சாக்லேட்டுகள் தான் அவர்களின் அழுகையை நிறுத்தும்.

சாக்லேட்டுகள் அவர்களின் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா? என்பதை ஒருபோதும் யோசித்தது உண்டா? அவர்களின் ஆசையை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில், இளம் வயதிலேயே அவர்களுக்கு பல நோய்களை நாமே விலைக்கொடுத்து வாங்கிக் கொடுக்கிறோம். இந்த சூழலில் டார்க் சாக்லேட் மற்றும் மில்க் சாக்லேட்டில் எது குழந்தைகளுக்கு சிறந்தது? என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உள்ளது? என பெற்றோர்கள் தெரிந்துக் கொள்வது அவசியமான ஒன்று.

மில்க் சாக்லேட் தயாரிக்கும் போது கோகோ பவுடர், பால் மற்றும் அதிக சர்க்கரையைப் பயன்படுத்துகின்றனர்.டார்க் சாக்லேட்டுகளை ஒப்பிடும் போது மில்க் சாக்லேட்டுகளில் கோ-கோ பவுடர் குறைவாகவும், அதிக இனிப்பு சுவை இருப்பதால் தான் குழந்தைகள் அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர்.

மில்க் சாக்லேட்டுகளில் புரோட்டீன் நிறைந்த பால் சேர்க்கப்படுவதால் குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது என்று சில ஆய்வுகள் கூறுகின்றனர்.

நாம் சாப்பிடக்கூடிய டார்க் சாக்லேட்டுகளில் அதிக அளவு கோ- கோ பவுடர், குறைந்த அளவு சர்க்கரை மற்றும் பால் சேர்க்கப்படுகிறது. மில்க் சாக்லேட்டுகளை விட கோ- கோ பவுடர் அதிகளவில் சேர்க்கப்படுவதால் கசப்பு சுவையாக இருக்கும் என்பதால் குழந்தைகள் அதிகளவில் விரும்பிச் சாப்பிடுவதில்லை.

இந்த டார்க் சாக்லேட்டில் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துவது முதல் புத்துணர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்துவது குறித்து பல்வேறு நன்மைகள் உள்ளன.

டார்க் சாக்லேட்டில் உள்ள பினாவனாய்டுகள் மற்றும் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சி உதவியாக இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றனர்.

பொதுவாக சாக்லேட்டுகள் சாப்பிடுவதே குழந்தைகளுக்குக் கேடு விளைவிக்கும் ஒரு செயல் தான். மில்க் சாக்லேட்டுகளை விட டார்க் சாக்லேட்டுகளில் சர்க்கரை குறைவான அளவு உள்ளது. இவை இரண்டையும் ஒப்பிடும் போது டார்க் சாக்லேட்டுகள் ஒரளவிற்கு சிறந்ததாக அமைகிறது.

இனிப்புகளைத் தவிர்ப்பது நல்லது. எப்பொழுதாவது ஒரு முறை ஆசைக்குக் கொடுக்கலாம். இதையே வழக்கமாக்கிக்கொள்வது தவறான செயல்..

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு உணவை உட்கொள்ள சரியான நேரம்

இரவு 9 மணிக்குப் பிறகு தொடர்ந்து இரவு உணவு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று...

காதலர் தினத்தையொட்டி இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்கள் இறக்குமதி

ரோஜாக்கான கேள்வி அதிகரிப்பினால் இம்முறை காதலர் தினத்தையொட்டி இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக...

அதிகமாக லிப்ஸ்டிக் யூஸ் பண்றீங்களா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க

மேக்கப் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? பெரும்பாலான பெண்கள் அலுவலகம் செல்லும் போது, கல்யாண நிகழ்ச்சிகள் போன்ற விழாக்களில்...