பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிபுணர் குழுவில் விடயம் சார்ந்த விசேட நிபுணத்துவம் கொண்ட 12 நிபுணர்கள் உள்ளடங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
பேர வாவியை தூய்மையாக்குவதற்காக இதற்கு முன்னர் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.
பேர வாவியில் துர்நாற்றம் வீசுவதற்கும் நீரின் நிறமாற்றத்திற்கும் பாசிகள் அதிகரித்திருப்பதே காரணமென அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு விடயத்துடன் தொடர்புடைய நிபுணர் குழுவின் மூலம் விரைவாக வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுமெனவும் அமைச்சர் அனுர கருணாதிலக்க மேலும் கூறினார்.