follow the truth

follow the truth

February, 19, 2025
Homeஉலகம்ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

Published on

ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்ளது. மேலும் முதல் 20 இடங்களில் 6 இந்தியர்களின் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.7.85 லட்சம் கோடி ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானி மேற்பார்வையிட்டு வருகிறார்.

4-வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர் மிஸ்திரியின் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.3.25 லட்சம் கோடி ஆகும். இவர்களின் குடும்பம் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருக்கிறது.

இந்தியாவை சேர்ந்த ஜிண்டால் குடும்பம் 7-வது இடத்தில் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.2.43 லட்சம் கோடி ஆகும். இந்த குடும்பம் ஓபி ஜிண்டால் குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது.

இந்தியாவை சேர்ந்த பிர்லா குடும்பம் 9-வது இடத்தில் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.1.99 லட்சம் கோடி ஆகும். 7 தலைமுறைகளாக இந்த குடும்பம் உலோகங்கள், சிமெண்ட் மற்றும் நிதி சேவை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

13-வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த பஜாஜ் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.1.74 லட்சம் கோடி ஆகும். இவர்கள் பஜாஜ் குழும நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்.

18-வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த இந்துஜா குடும்பம் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி ஆகும். இந்த குடும்பம் இந்துஜா குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனாவில் முதியோர்களுக்காக சிறப்பு ரயில் அறிமுகம்

நாட்டில் வளர்ந்து வரும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தருவது மட்டும் இல்லாமல் நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல 'சில்வர்...

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? சவுதியில் இன்று அமெரிக்கா – ரஷ்யா பேச்சு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. மூன்று ஆண்டை நெருங்கும் இந்த போரை நிறுத்த டொனால்ட் டிரம்ப்...

பங்களாதேஷிற்கு நிச்சயம் மீண்டும் திரும்புவேன்- ஷேக் ஹசீனா

பங்களாதேஷில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு...