இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் இன்று (14) காலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
திருமதி ஜூலி சங் காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு வந்திருந்தார், அங்கு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தங்கியதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய அவர் அங்கு வந்துள்ளார்.
முன்னாள் தூதுவருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி.ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.