கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட டான் பிரியசாத் இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வெல்லம்பிட்டிய பொலிஸ் முன்வைத்த சாட்சியங்களைப் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல, சந்தேக நபரை ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.